/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பி.எம்.சி., டெக் ஐ.டி.ஐ., 29ம் ஆண்டு துவக்க விழா
/
பி.எம்.சி., டெக் ஐ.டி.ஐ., 29ம் ஆண்டு துவக்க விழா
ADDED : ஆக 25, 2025 02:56 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பி.எம்.சி., டெக் ஐ.டி.ஐ., மற்றும் தொழிற்பள்ளியின், 29ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. பி.எம்.சி., டெக் கல்வி நிறுவன தலைவர் குமார் தலைமை வகித்து பேசும் போது, 'மாணவர்கள் முழு ஈடுபாடுடன், தகவல் பரிமாற்று திறனை வளர்த்து கொள்வதன் மூலம், வேலை-வாய்ப்பை பெற முடியும்' என்றார்.
செயலாளர் மலர் குத்துவிளக்கேற்றி வைத்தார். இயக்குனர் சுதா-கரன், இன்ஜினியரிங் கல்லுாரி நிறுவன தொழில் தொடர்பு மேலாளர் கிருஷ்ணன் மற்றும் திட்ட மேலாளர் முருகன், ஐ.டி.ஐ., முதல்வர் பாபு பேசினர்.ஓசூர், கன்சாய் நெரோலாக் பெயின்ட்ஸ் நிறுவன, மனித வள மேம்பாட்டு துறை மேலாளர் முரளி பேசும்போது, 'ஓசூர், சூள-கிரி சுற்று வட்டார பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. அதனால் ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்க-ளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்' என்றார். நாகராஜன், நந்-திகேஷ், வினோத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.