/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி வாரச்சந்தை கடும் வெயிலால் 'வெறிச்'
/
போச்சம்பள்ளி வாரச்சந்தை கடும் வெயிலால் 'வெறிச்'
ADDED : மார் 17, 2025 03:42 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில், ஞாயிற்றுக்கிழமையில் வாரச்சந்தை கூடுகி-றது.
இதில் கடந்த ஒரு மாத காலமாக அதிகளவு அவரை, துவரை, உளுந்து உள்ளிட்ட தானிய வகைகள் விற்பனைக்கு விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.
அவற்றை வாங்க சேலம் லீ பஜார், திருவண்ணாமலை, திருப்-பத்துார், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரி-களும் மற்றும் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதி மக்களும் அதிகளவு வந்து சென்றனர்.
இந்நிலையில் கடந்த, 3 நாட்களாக பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. இதனால் நேற்று கூடிய வாரச்சந்தைக்கு பொருட்-களை வாங்க மக்கள் வராததால், சந்தை வெறிச்சோடி காணப்பட்-டது.
இதனால் வியாபாரிகள் விரக்தியில் தாங்கள் விற்பனைக்கு கொண்டு வந்த காய்கறிகள், தானியங்களை திருப்பி எடுத்துச் சென்றனர்.