ADDED : செப் 06, 2026 04:44 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலை-யத்தில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்கு, விழிப்பு-ணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பன்னீர்-செல்வம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஓசூர் ஜே.சி.ஐ., அமைப்பு சார்பில் மாணவ, மாணவியருக்கு அரசு தேர்வுகள் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டன.
மேலும், அரசு துறைகளில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்-கான வாய்ப்பு, அரசு தேர்வு மற்றும் அதற்கான தயாரிப்பு முறைகள் குறித்து, மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்-டன.
சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில், மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்-களை தடுப்பது, தங்களை பாதுகாத்து கொள்வது மற்றும் உரி-மைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஓசூர் ஜே.சி.ஐ., தலைவர் ஷாலினி, துணைத்தலைவர் கீர்த்தனா உட்-பட பலர் பங்கேற்றனர்.
