/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 'போக்சோ'
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 'போக்சோ'
ADDED : ஜூலை 31, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை, பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அவத்குமார், 24. ஓசூர் அடுத்த அக்கொண்டப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் தங்கியுள்ள அசாம் மாநிலத்தை சேர்ந்த, 10 வயது சிறுமியை, நேற்று முன்தினம் மதியம் அவரது
பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், தன் அறைக்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் புகார் படி, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் நேற்று, போக்சோ வழக்குப்பதிந்து, அவத்குமாரை கைது செய்தனர்.