/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : மே 02, 2025 01:56 AM
ஊத்தங்கரை:ஊத்தங்கரை, எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மெயின்ரோடு பகுதியில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. இதில் பொக்லைன் உரிமையாளர்கள்,
டீசல், உதிரி பாகங்கள், புதிய வாகனத்தின் விலை உயர்வு, இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வு போன்ற காரணங்களால் மிகவும் சிரமப்படுவதால், ஒரு மணி நேரத்திற்கு, 2,000 ரூபாய், 2 மணி நேரத்திற்கு 3,000 ரூபாய் என, குறைந்தளவு வாடகை நிர்ணயம் செய்யக்கோரி, மே, 1 முதல், 3 வரை மூன்று நாள், தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஊத்தங்கரை பகுதிகளில், பொக்லைன் இயந்திரம் மூலம் நடக்கும் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

