ADDED : ஏப் 20, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூர் சானசந்திரத்திலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், உரிய அனுமதியின்றி பொக்லைன் வாகனம் மூலம் மண் அள்ளுவதாக, ஓசூர் ஆர்.ஐ., இளங்கோவிற்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற
அவரது தலைமையிலான வருவாய்த்துறையினர், திருட்டுத்தனமாக மண் அள்ளிய பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, பொக்லைன் வாகன டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

