/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் கொடி அணிவகுப்பு
/
மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் கொடி அணிவகுப்பு
மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் கொடி அணிவகுப்பு
மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் கொடி அணிவகுப்பு
ADDED : ஏப் 02, 2024 04:51 AM
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் வரும், 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நடக்கும் லோக்சபா தேர்தலில், பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிப்பதை வலியுறுத்தி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். பர்கூர் தாலுகா அலுவலகம் எதிரில் பர்கூர் டி.எஸ்.பி., பிரித்விராஜ் சவுகான் அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் இன்ஸ்பெக்டர்கள் வளர்மதி, நாகலட்சுமி, சிவசந்திரன், எஸ்.எஸ்.ஐ.,க்கள், உள்பட, 150க்கும் மேற்பட்ட போலீசார், கலந்து கொண்டனர். போலீசாரின் கொடி அணிவகுப்பு பர்கூர் முக்கிய சாலைகள், பி.டி.ஓ., அலுவலகம் வழியாக சென்று, பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் நிறைவடைந்தது.
* வேப்பனஹள்ளியில் லோக்சபா தேர்தலில், பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க வலியுறுத்தி போலீசார், மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து அணிவகுப்பு நடத்தினர். குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொடி அணிவகுப்பை துவக்கி வைத்தார். வேப்பனஹள்ளி பி.டி.ஓ., அலுவலகம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை தமிழக நடந்த அணிவகுப்பில், 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் கலந்து
கொண்டனர்.

