/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் அண்ணாதுரை சிலை மீது செருப்பு வீச்சு பிளம்பரிடம் போலீசார் விசாரணை
/
ஓசூரில் அண்ணாதுரை சிலை மீது செருப்பு வீச்சு பிளம்பரிடம் போலீசார் விசாரணை
ஓசூரில் அண்ணாதுரை சிலை மீது செருப்பு வீச்சு பிளம்பரிடம் போலீசார் விசாரணை
ஓசூரில் அண்ணாதுரை சிலை மீது செருப்பு வீச்சு பிளம்பரிடம் போலீசார் விசாரணை
ADDED : நவ 28, 2024 06:56 AM
ஓசூர்: ஓசூரில், நேற்று நடந்த உதயநிதி பிறந்த நாள் விழாவின் போது, அண்ணாதுரை சிலை மீது செருப்பை வீசி எறிந்த பிளம்பரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, தாலுகா அலுவ-லக சாலையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, மேயர் சத்யா தலைமையில் நேற்று காலை கட்சியினர் மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தினர்.
பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி விட்டு, கட்சியினர் டீ சாப்பிட சென்றனர். அப்போது
அவ்வழியாக வந்த நபர் ஒருவர், தனது காலில் கிடந்த செருப்புகளை கழற்றி, தி.மு.க.,வினர் வைத்-திருந்த
உதயநிதி பிறந்த நாள் விழா பேனரை நோக்கி வீசி எரிந்தார். அப்போது ஒரு செருப்பு பேனர் மீது விழுந்தது.
மற்-றொரு செருப்பு அருகில் இருந்த முன்னாள் முதல்வர் அண்ணா-துரை சிலை மீது விழுந்து, சிலைக்கு அடியில்
விழுந்தது. இதை கட்சியினர் பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த நபரை பிடிக்க நினைத்தனர். அதற்குள் அவர்
நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றார். தகவலறிந்த ஓசூர் டவுன் போலீசார், அந்த நபரை பிடித்து ஸ்டேஷனுக்கு
அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே மண்ணார்கோட்-டையை சேர்ந்த ராஜி, 44, என்பதும், ஓசூர் பழைய
ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் அவர், பிளம்-பராக வேலை செய்து வருவதும்
தெரிந்தது. இவரது மனைவி ராதா, 42, ஆசிரியையாக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்
பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஓசூர் சார்பு நீதிமன்-றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
நீதிமன்றத்திற்கு சென்ற போது, அவர் செருப்புகளை வீசி எரிந்துள்ளார். சற்று மன-நலம் பாதிக்கப்பட்டவர்
போல் அவர் காணப்படுவதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், போலீசார் தரப்பில்
கூறப்படுகிறது. ஸ்டேஷன் வளாகத்தில் தி.மு.க.,வினர் திரண்ட நிலையில், அவர் மீது போலீசிலும் புகார்
செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.