/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வி.சி.க.,வினர் 48 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
/
வி.சி.க.,வினர் 48 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
வி.சி.க.,வினர் 48 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
வி.சி.க.,வினர் 48 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
ADDED : செப் 03, 2025 01:26 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளியில் கடந்த, 31ம் தேதி, விநாயகர் சிலையை கரைக்க எடுத்து சென்ற ஒரு தரப்பினர், அப்பகுதியில் உள்ள கோவிலில் பூஜைகள் செய்ய முயன்றனர். இதை ஊர்மக்கள் தடுத்ததால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது
. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், வி.சி., கட்சியினர், நேற்று முன்தினம் காலை, ஓசூர் சப் - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக, ஓசூர் டவுன் எஸ்.ஐ., சபரிவேலன் புகார் படி, உத்தனப்பள்ளியை சேர்ந்த வி.சி., கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வேங்கைவளவன், 46, மற்றும் 15 பெண்கள் உட்பட, 48 பேர் மீது, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.