/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போலீசார் 6 வழக்குகள் பதிவு
/
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போலீசார் 6 வழக்குகள் பதிவு
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போலீசார் 6 வழக்குகள் பதிவு
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போலீசார் 6 வழக்குகள் பதிவு
ADDED : மார் 25, 2024 01:03 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் ஹட்கோ ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., மாதப்பன் மற்றும் போலீசார்
ரோந்து சென்றபோது, தனியார் கல்லுாரி முன், அ.தி.மு.க., கட்சியின்
சின்னத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதை யார்
ஒட்டியது என்பது தெரியவில்லை. தேர்தல் விதிமுறைகளை மீறி, போஸ்டர்
இருந்ததால், போலீசார் இரு வழக்குகள் பதிந்து விசாரிக்கின்றனர்.
ராயக்கோட்டை
ஸ்டேஷன் எஸ்.ஐ., பச்சமுத்து மற்றும் போலீசார், பஸ் ஸ்டாண்ட் பகுதியில்
ரோந்து சென்றபோது, தேர்தல் விதிமுறையை மீறி, அ.தி.மு.க.,
சின்னத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக,
தே.மு.தி.க., ஒன்றிய செயலாளரான கருவாடனுாரை சேர்ந்த நாகராஜ், 48,
என்பவர் மீது வழக்குப்பதியப்பட்டது.
கெலமங்கலம் ஸ்டேஷன்
எஸ்.எஸ்.ஐ., காமராஜ் மற்றும் போலீசார், அண்ணா நகர் பகுதியில் ரோந்து
சென்றபோது, தேர்தல் விதிமுறையை மீறி, கெலமங்கலம் பி.டி.ஓ., அலுவலக
வளாக சுவற்றில், இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருந்தது. இதனால்,
கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த ராஜா, 42, என்பவர் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.
* நேற்று முன்தினம் பர்கூர் போலீசார் ரோந்து
சென்றனர். அப்போது பர்கூர் பகுதியில் சுவற்றில் அனுமதியின்றி, பா.ஜ.,
கட்சியின் தாமரை சின்னம் வரையப்பட்டிருந்தது- தெரிந்தது. இது
தொடர்பாக, பர்கூர் எம்.ஜி.ஆர்., நகர் சாந்தி, 40, மற்றும் லலிதா, 65 ஆகிய
இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

