/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் 3 'ஷிப்ட்' முறையில் போலீசார் பாதுகாப்பு
/
கி.கிரி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் 3 'ஷிப்ட்' முறையில் போலீசார் பாதுகாப்பு
கி.கிரி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் 3 'ஷிப்ட்' முறையில் போலீசார் பாதுகாப்பு
கி.கிரி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் 3 'ஷிப்ட்' முறையில் போலீசார் பாதுகாப்பு
ADDED : ஏப் 21, 2024 01:50 AM
கிருஷ்ணகிரி:மின்னணு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள, அரசு பாலிடெக்னிக்
வளாகத்தில் சி.ஆர்.பி.எப்., மற்றும் போலீசார், 3 'ஷிப்ட்' முறையில்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தல்
நேற்று முன்தினம் நடந்தது. 6 சட்டசபை தொகுதிகளிலுள்ள, 1,888
ஓட்டுச்சாவடிகளுக்கு, 4,526 பேலட் யூனிட், 2,251 கன்ட்ரோல் யூனிட்
மற்றும் 2,392 வி.வி.பேட் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
பயன்படுத்தப்பட்டன.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்,
கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையத்தில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டன. மேலும், மின்னணு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை, 24
மணி நேரமும் கண்காணிக்க அனைத்து இடங்களிலும், 300 'சிசிடிவி'
அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள்
எல்.இ.டி., 'டிவி' திரைகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும்
இரவு நேரங்களில் போதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
வளாகத்தில், 4 ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டு ஒரு ஷிப்டுக்கு, 12
நபர்கள் கண்காணித்து வருகின்றனர். மின்சார வாரியம் சார்பாக ஒரு
ஷிப்ட்டுக்கு, 4 நபர்கள் பணியாற்ற உள்ளனர். மேலும் ஒரு ஷிப்ட்டுக்கு
ஒரு தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
வைப்பறை சுற்றி சி.ஆர்.பி.எப்.,. 24 பேரும், தமிழ்நாடு சிறப்பு போலீஸ்
பிரிவை சேர்ந்த 45 பேரும், ஆயுதப்படை மற்றும் உள்ளுர் போலீசார், 253
என, மொத்தம் 322 பேர், 3 'ஷிப்ட்' முறையில் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்.

