/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் வேப்பனஹள்ளி
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் வேப்பனஹள்ளி
ADDED : மே 07, 2025 01:38 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு, சூளகிரி மணி மகாலிலும், தளி சட்டசபை தொகுதிக்கு, தேன்கனிக்கோட்டை சப்தகிரி மகாலிலும், ஓசூர் சட்டசபை தொகுதிக்கு, ஓசூர் மீரா மகால் திருமண மண்டபத்திலும் நேற்று தனித்தனியாக நடந்தது.
மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கி பேசும் போது, ''ஓசூர், தளி, ஆகிய, 3 சட்டசபை தொகுதியில், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும். அதற்காக, வீடுதோறும் சென்று தி.மு.க., அரசின் நலத்திட்ட உதவிகளை எடுத்து கூறி ஆதரவு திரட்ட வேண்டும்,'' என, கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாநகர மேயர் சத்யா, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர்
பங்கேற்றனர்.