/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.5.06 கோடி மதிப்பில் மேம்பாலம், பள்ளி வகுப்பறை கட்டடத்துக்கு பூஜை
/
ரூ.5.06 கோடி மதிப்பில் மேம்பாலம், பள்ளி வகுப்பறை கட்டடத்துக்கு பூஜை
ரூ.5.06 கோடி மதிப்பில் மேம்பாலம், பள்ளி வகுப்பறை கட்டடத்துக்கு பூஜை
ரூ.5.06 கோடி மதிப்பில் மேம்பாலம், பள்ளி வகுப்பறை கட்டடத்துக்கு பூஜை
ADDED : ஜன 31, 2024 03:32 PM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரிக்கு நேற்று வருகை புரிந்த அமைச்சர் சக்கரபாணி, 5.06 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட மேம்பாலம், பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி பஞ்., மரிமானப்பள்ளியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, அப்பகுதி மக்கள் நீண்டகால கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அப்பகுதியில், 2.34 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. மேம்பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அமைச்சர் சக்கரபாணி பணிகளை துவக்கி வைத்தார்.அதேபோல, மத்துார் அடுத்த கரடிக்கொல்லப்பட்டி சாலையில், கோட்டூர் ஆற்றின் குறுக்கே, 2.42 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம், ஜிட்டோபனப்பள்ளி தொடக்கப்பள்ளிக்கு, 30.45 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை உள்ளிட்ட பணிகளையும், அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், வேளாண் துறை சார்பில், 500 விவசாயிகளுக்கு மானிய விலையில், 1.70 கோடி ரூபாய் இடுபொருட்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு, 1.09 கோடி ரூபாய் நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்.தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்., பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்து, 2,098 பேருக்கு, 4.94 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 643 மாணவியருக்கு, 27.70 லட்சம் ரூபாய், மத்துார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 346 மாணவியருக்கு, 14.27 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்.