ADDED : அக் 14, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, வாணிப்பட்டி ஊராட்சி, அம்மன்கோவில்பதி கிராமத்திலிருந்து, ஓலைப்பட்டிக்கு இணைப்பு சாலை, அதேபோல் அம்மன்கோவில் பதியிலிருந்து பெருமாள் கோவில் வரையிலான சேதமான சாலையை அகற்றி, மீண்டும் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட உள்ளது.
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 16.75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம், பணிகளை துவக்கி வைத்தார்.