/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரை குறை மேம்பாலத்திலிருந்து பைக்குடன் விழுந்த 2 பேர் பலி
/
அரை குறை மேம்பாலத்திலிருந்து பைக்குடன் விழுந்த 2 பேர் பலி
அரை குறை மேம்பாலத்திலிருந்து பைக்குடன் விழுந்த 2 பேர் பலி
அரை குறை மேம்பாலத்திலிருந்து பைக்குடன் விழுந்த 2 பேர் பலி
ADDED : அக் 13, 2025 11:41 PM
ஓசூர்: ஓசூரில், சிப்காட் ஜங்ஷன் பகுதியில், கட்டி முடிக்காத மேம்பாலத்தில் பைக்கில் சென்ற இரு இன்ஜினியர்கள், 30 அடி உயர மேம்பாலத்திலிருந்து தவறி, சர்வீஸ் சாலையில் விழுந்து பலியாகினர்.
கேரள மாநிலம், கோழிகோடை சேர்ந்தவர் விஜயராஜ், 29; ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். கர்னுார் பகுதியை சேர்ந்த சாயோஜ் கங்கா, 28; பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தார். இருவரும் யமஹா எப்.இசட்., பைக்கில் நேற்று அதிகாலை, பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்தனர். விஜயராஜ், 'ஹெல்மெட்' அணிந்த படி பைக்கை ஓட்டினார்.
பெங்களூரு- - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், தமிழக எல்லையான ஓசூர் சிப்காட் ஜங்ஷன் பகுதியில் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் குறுக்கே தடுப்புகள் ஏதும் வைக்காததால், பாலம் பயன்பாட்டில் இருப்பதாக நினைத்து, நேற்று அதிகாலை, 4:15 மணிக்கு இருவரும் முழுமை பெறாத பாலத்தின் மீது பைக்கில் சென்றனர்.
பாலத்தின் மறுபுறம் ஜல்லி மட்டுமே கொட்டி வைத்திருந்ததால், கட்டுப்பாட்டை இழந்து, 30 அடி உயர மேம்பாலத்தில், தடுப்புச்சுவர் கட்டாத பகுதியிலிருந்து, கீழே சர்வீஸ் சாலையில் பைக்குடன் இருவரும் விழுந்தனர். இதில், விஜயராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சாயோஜ் கங்கா மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.