/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு கல்லுாரியில் மக்கள் தொகை தின விழா
/
அரசு கல்லுாரியில் மக்கள் தொகை தின விழா
ADDED : ஜூலை 12, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், ஒவ்வொரு ஆண்டும், ஜூலை, 11ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நேற்று உலக மக்கள் தொகை தினம் குறித்த நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் மங்கையர்க்கரசி தலைமை வகித்தார். அரூர் வட்டார மருத்துவ அலுவலர் அழகரசன், மக்கள் தொகை பெருக்கத்தின் தாக்கம் குறித்து பேசினார். முன்னதாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர், நிகழ்ச்சியை கல்லுாரி இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் குமரன் ஒருங்கிணைத்தார்.

