/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அஞ்சல் ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அஞ்சல் ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 04, 2025 01:16 AM
அஞ்சல் ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கம் சார்பில், 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின், 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பாதகமாக மத்திய அரசு அறிவித்துள்ள சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்ட செயலாளர் விஜயராஜன், மாவட்ட பொருளாளர் வேடியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

