/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குண்டும் குழியுமான தார்ச்சாலை வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
/
குண்டும் குழியுமான தார்ச்சாலை வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
குண்டும் குழியுமான தார்ச்சாலை வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
குண்டும் குழியுமான தார்ச்சாலை வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
ADDED : ஜூலை 24, 2025 01:16 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, மகனுார்பட்டி பஞ்., பகுதியில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலை
சேதமாகி, குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஊத்தங்கரை அடுத்த, மகனுார்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியிலிருந்து, விசுவாசம் பட்டி கிராமம் வரை, 3 கி.மீ., தார்ச்சாலை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. கடந்த, 5 ஆண்டுகளுக்கு மேலாக சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. இது குறித்து கடந்த, 5 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
அண்ணா நகர், நரிக்கானுார், குரும்பற வலசு, விசுவாசம்பட்டி கிராம பொதுமக்கள் இரவில் அவசர தேவைகளுக்காக நகர பகுதிக்கு இச்சாலைவழியாக செல்வது மிக சவாலாக உள்ளதாகவும், மேலும் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாத அவலநிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில், டூவீலர் ஓட்டிகள் தினமும் சாலையில் விழுந்து, விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளதாக கூறுகின்றனர். எனவே, போர்கால அடிப்படையில் புதிய தார்ச்சாலை அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.