ADDED : அக் 02, 2026 02:29 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: ஓசூர், சிப்காட் 2 மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை, 6:00 மணி முதல் மின்வெட்டு ஏற்பட்டது.
இப்பகுதியில், ஏராளமான தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ள நிலையில், ஒரு தொழிற்சாலை அருகே மின்கம்பியில் மரம் விழுந்ததால் மின்-தடை ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்தனர்.ஆனால் இரவு, 7:00 மணி ஆகியும் மின் இணைப்பு வழங்கப்ப-டவில்லை. காலாண்டு விடுமுறையில் குழந்தைகள் வீட்டிலுள்ள நிலையில் நாள் முழுவதும், காரணமின்றி மின்தடை ஏற்பட்டுள்-ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், மின் இணைப்பு வரும்போது, வரும் என, அலட்சியமாக பதில் கூறுகிறார்கள் என, அப்பகுதி மக்கள் கூறினர்.
