/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்ட பொதுக்குழு
/
தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்ட பொதுக்குழு
தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்ட பொதுக்குழு
தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்ட பொதுக்குழு
ADDED : ஜூன் 13, 2025 01:19 AM
ஊத்தங்கரை, தமிழ்நாடு தொடக்க பள்ளி
ஆசிரியர் கூட்டணி, மாநில அமைப்பின் சார்பில் கடந்த, 9ம் தேதி சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், மாநில தலைவராக, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டார். அவரை, அகில
இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணை பொதுச்செயலாளர் ரங்கராஜன் மற்றும் முன்னாள் மாநில
நிர்வாகிகள், அனைத்து மாவட்ட செயலாளர்களும் வாழ்த்தினர்.
கூட்டணியின், ஊத்தங்கரை வட்டார பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை, 4:30 மணியளவில், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்தது. வட்டார தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இதில், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மாநில தலைவராக தேர்வு பெற்றமைக்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்குமார், மாவட்ட துணை செயலாளர் முருகன், மாவட்ட வலைதள அமைப்பு ஜோதி மற்றும் பலர் வாழ்த்தினர். பொருளாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.