/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கலந்தாய்வு பொதுமாறுதலை நிறுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
/
கலந்தாய்வு பொதுமாறுதலை நிறுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
கலந்தாய்வு பொதுமாறுதலை நிறுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
கலந்தாய்வு பொதுமாறுதலை நிறுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில் கலந்தாய்வு நடந்து வரும் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில், பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி, நேற்று மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்-பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தியோடர் ராபின்சன், மாவட்ட தலைவர் அருண் பிரகாஷ் ராஜ், செயலாளர் ஆரோக்கியராஜ், பொரு-ளாளர் ராஜகோபால், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒன்றிய செயலாளர் ராவணன், மாவட்டத் தலைவர் சேகர் ஆகியோர் பேசினர்.
போராட்டத்தில், தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீத ஆசிரியர்களை, குறிப்-பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அரசாணை எண்: 243ஐ ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதால், இறுதி தீர்ப்பு வரும் வரை, அறிவித்துள்ள கலந்தாய்வு பொதுமாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் கலந்தாய்வு நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பிய, 70 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்-டபத்தில் அடைத்து வைத்தனர்.
* ஓசூர் கல்வி மாவட்டத்தில் பணியாற்றும், 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், நேற்று தற்-செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்-டனர். ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளி வளாகத்திற்குள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் பொன்நாகேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபி வரவேற்றார். ஆசிரியர்கள் பவுன்துரை, மஞ்-சுநாத், அருண், முருகேஷ், கோபால் உட்பட பலர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.