/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ADDED : ஆக 21, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், பெட்டமுகி-லாளம் பஞ்., உட்பட்ட காமகிரி அரசு பள்ளியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.
மேலும், பொதுமக்களிடம் இருந்து, 300க்கும் மேற்-பட்ட கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர்-களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். தனி தாசில்தார் சந்திரன், ஆர்.ஐ., சலீம் பாஷா, பி.டி.ஓ.,க்கள் சதீஷ்-பாபு, சாந்தி, துணை பி.டி.ஓ., முருகன், பெட்டமுகிலாளம் பஞ்., தலைவர் முனிராஜ், துணைத்தலைவர் முருகன் உட்பட பலர் பங்-கேற்றனர்.