sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'தனியார் ரத்த வங்கிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்'

/

'தனியார் ரத்த வங்கிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்'

'தனியார் ரத்த வங்கிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்'

'தனியார் ரத்த வங்கிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்'


ADDED : டிச 13, 2024 09:03 AM

Google News

ADDED : டிச 13, 2024 09:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில் கமிஷனர் ஸ்ரீகாந்த், மாநகர அலுவலர் அஜிதா முன்னிலையில், பொது சுகாதார குழு கூட்டம் நடந்தது.இதில் ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன் பேசியதாவது: ஓசூரில், குடோன்களை கண்காணித்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தாலே, பெருமளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்-கலாம். தெருநாய்கள் தொல்லையால், அவற்றை பிடித்து கருத்தடை செய்து, வெறிநாய் தடுப்பூசி பணியை துரிதப்படுத்த வேண்டும்.

திருவிழா சமயங்களில், பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக, இரு மொபைல் டாய்லெட் வாங்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் வீடு-களில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மாநகராட்-சியிடம் உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிய-ருக்கு போதை பொருட்கள் தொடர்பாகவும், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டும்.

மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்-பனை, குப்பை கொட்டுதல், கொசுப்புழு உற்-பத்தி, போதை பொருட்கள் விற்பனை, மாடு-களை சாலையில் திரிய விட்டவர்களுக்கு அப-ராதம் என கடந்த ஓராண்டில் மட்டும், 73.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்-ளது.

ஓசூர், தொழிற்சாலை நகரம் என்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் ரத்த வங்கிகள் உரிய அனுமதி பெற்று செயல்படுகி-றதா என்பதை கண்காணித்து, அவற்றின் தொடர்பு எண்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சில ரத்த வங்கிகள், மக்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்கின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.

கூட்டத்தில் மொத்தம், 12 தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன. ஜி.ஹெச்., மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பங்கேற்ற டாக்டர்கள், செவிலியர்கள் அடிப்படை கட்ட-மைப்பு வசதிகள் கேட்டு விடுத்த கோரிக்-கையை, செய்து கொடுப்பதாக, கமிஷனர் ஸ்ரீகாந்த் உறுதியளித்தார். கவுன்சிலர்கள் லட்-சுமி, மோசின் தாஜ், ஆறுமுகம் உட்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us