/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் ஊழியரிடம் ரூ.45.82 லட்சம் மோசடி
/
தனியார் ஊழியரிடம் ரூ.45.82 லட்சம் மோசடி
ADDED : அக் 01, 2025 08:11 AM
கிருஷ்ணகிரி; கிரு ஷ்ணகிரி, பவர் ஹவுஸ் காலனியை சேர்ந்தவர் ரவி, 58; தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல் போன் எண்ணை, ஜூலை, 28ல் ஒரு, 'வாட்ஸாப்' குரூப்பில் மர்ம நபர்கள் இணைத்தனர்.
அ தில், குறிப்பிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து, லாபம் வந்ததாக, சிலர் குரூப்பில் பதிவிட்டனர். இதை நம்பிய ரவி, சில நிறுவனங்களின் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தார். அதற்கு நல்ல லாபம் கிடைத்தது.
இந்நி லையில், தன்னிடமு ள்ள, 45. 82 லட்சம் ரூபாயை அதிக லாபம் வரும் என எண்ணி, மர்ம நபர்கள் கூறிய, வங்கி கணக்குகளில், அனுப்பினார். பின் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர், நேற்று முன்தினம் அளித்த பு கார் படி, கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்ற னர்.