/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விஜயதசமியில் 'வித்யாரம்பம எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
/
விஜயதசமியில் 'வித்யாரம்பம எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
விஜயதசமியில் 'வித்யாரம்பம எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
விஜயதசமியில் 'வித்யாரம்பம எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
ADDED : அக் 03, 2025 01:31 AM
கிருஷ்ணகிரி, விஜயதசமியை முன்னிட்டு, குழந்தைகளுக்கு 'வித்யாரம்பம்' எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரியில், சேலம் சாலையிலுள்ள ஐயப்பன் கோவிலில், நேற்று விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பெற்றோர் தங்கள் குழந்தையை மடியில் அமர வைத்து, 'ஓம் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ' என குழந்தையின் கையை பிடித்து அரிசியிலும், நெல்மணியிலும் எழுதினர். கோவில் குருக்கள், குழந்தையின் நாக்கில் தங்கத்தால் 'அ' என்றும் 'ஓம்' என்று எழுதி அட்சராட்பியாசத்தை துவக்கி வைத்தார்.
மேலும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தங்க எழுத்தாணியால் நாவில், 'ஹரி ஸ்ரீ கணபதே நமஹ' என எழுதி ஆசீர்வாதம் செய்தார்
இதில், 20க்கும் மேற்பட்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய உடை அணிவித்து அழைத்து வந்திருந்தனர். இதேபோல், பள்ளியில் சேர்க்க தயாராக உள்ள குழந்தைகளின் பெற்றோர் நேற்று பூஜை அறையில் அமர்ந்து, தங்கள் குழந்தைகளுக்கு அரிசியில், அ, க, என்ற எழுத்துகளை எழுத கற்றுத்தந்தனர். நேற்று விஜயதசமியை முன்னிட்டு மாவட்டம் முழுவதுமுள்ள அரசு துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்தது.