/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் என தனியார் ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி
/
ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் என தனியார் ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி
ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் என தனியார் ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி
ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் என தனியார் ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி
ADDED : ஆக 21, 2025 02:32 AM
கிருஷ்ணகிரி, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், அதிக லாபம் எனக்கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம், 7.74 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஜூஜூவாடி அடுத்த சின்ன எலச கிரியை சேர்ந்தவர் உதய குமார், 54, தனியார் நிறுவன ஊழியர். இவரது, 'வாட்ஸாப்'பிற்கு கடந்த ஜூலை, 23ல் ஒரு 'மெசேஜ்' வந்துள்ளது. அதில், குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என இருந்தது. அதை நம்பிய உதய குமார், சில நிறுவனங்களில் முதலீடு செய்தார். அதற்கு, முதலீட்டு தொகையுடன் சிறிதளவு லாபமும் கிடைத்தது. அதை தொடர்ந்து, சில எண்களில் இருந்து, அதேபோல வந்த மெசேஜில் உள்ள 'லிங்க்'கை பயன்படுத்தி முதலீடு செய்து, சிறிதளவு லாபமும் பெற்று வந்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் வந்த மெசேஜில் இருந்த 'லிங்க்'குகளில், தன்னிடமிருந்த, 7.74 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய, 4 வங்கி கணக்குகளில் பிரித்து அனுப்பி வைத்தார். அதன்பின் அவருக்கு எந்த தொகையும் கிடைக்கவில்லை.
சந்தேகமடைந்த உதயகுமார், தனக்கு, 'மெசேஜ்' அனுப்பிய எண்களுக்கு போன் செய்தபோது, அனைத்து எண்களும் 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.