/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் பள்ளி மாணவர் தற்கொலை சக மாணவர்களுடன் தகராறால் விபரீதம்
/
தனியார் பள்ளி மாணவர் தற்கொலை சக மாணவர்களுடன் தகராறால் விபரீதம்
தனியார் பள்ளி மாணவர் தற்கொலை சக மாணவர்களுடன் தகராறால் விபரீதம்
தனியார் பள்ளி மாணவர் தற்கொலை சக மாணவர்களுடன் தகராறால் விபரீதம்
ADDED : ஆக 21, 2025 02:33 AM
சேலம், சேலம், சீலநாயக்கன்பட்டி, ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ஆனந்தன். உடையாப்பட்டி அருகே பித்தளை பாத்திரம் தயாரித்து விற்கிறார். இவரது மனைவி சண்முகபிரியா, தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். இவர்களது மகன்கள் தயாக்கர், 13, விருபாகர், 6. தயாக்கர், குரங்குச்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்தார்.
நேற்று முன்தினம் இரவு, தயாக்கர், வீட்டின் தனி அறையில் படித்துக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, சண்முகபிரியா எழுந்தபோது, தயாக்கர் அறையில் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அங்கு சென்று பார்த்தபோது, தயாக்கர் துாக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்து கத்தினார். ஆனந்தன் தகவல்படி, அன்னதானப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'பள்ளியில் சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில், மாணவர் தற்கொலை செய்திருப்பது, முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. பள்ளியில் விசாரணை நடத்தப்பட்ட பின், விபரம் தெரியவரும்' என்றனர்.