/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா

ADDED : ஜூன் 23, 2025 05:09 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 மற்றும், 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, தமிழ்நாடு மண்-பாண்ட தொழிலாளர் சங்கம் மற்றும் திருநீலகண்டர் கல்வி அறக்-கட்டளை சார்பில், 23ம் ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று நடந்-தது.
அறக்கட்டளை தலைவர் புலவர் வெங்கடேஸ்வர சுவாமிஜீ தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் கங்கா-தரன், ஓய்வுபெற்ற ரேஞ்சர் சுந்தர்ராஜன், எல்.ஐ.சி., முகவர் ராஜ-மாணிக்கம், தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, அப்பர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்பாண்ட தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் முரு-கேசன், செயல்தலைவர் ஜெயபால், மாநில இணை செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில், 10ம் மற்றும், 12ம் வகுப்பில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, 7,500 ரூபாய், 2ம் பரிசாக, 6,000 ரூபாய், 3ம் பரிசாக, 5,000 ரூபாய், ஆறுதல் பரிசாக, 25 பேருக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு, மெடல், நோட்டு புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன.