/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
செந்தில் மெட்ரிக் பள்ளியில் கலை நிகழ்ச்சி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

ADDED : அக் 26, 2025 01:05 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி செந்தில் மெட்ரிக் பள்ளியில், மழலையர் முதல், ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பிரிவுகளில், ஸ்பெக்ட்ரம் ஆப் ஸ்பெலண்டர் என்ற கலை நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவர் மணிமேகலை
கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,
ராஜா ரவி தங்கம், 'பெருநகரங்களுக்கு இணையாக ஓர் பள்ளியை கிருஷ்ணகிரியில் பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அனைத்து நற்பழக்கங்களையும் மாணவர்கள் பள்ளியில் கற்றுக் கொள்வதோடு தனிமனித ஒழுக்கத்தை ஒவ்வொரு மாணவரும் பின்பற்ற வேண்டும்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி நடந்து, எதிர்காலத்தில் சிறப்புமிக்க பணிகளில் பணியாற்ற வேண்டும்' என்றார். பின்னர் யோகா, கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
விழாவில், செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் வேதகுமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.