/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு பரிசு
/
முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜூன் 02, 2025 03:28 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், பருவதராஜ மீனவர் சமூக நல அறக்கட்டளை மற்றும் மீன் வியாபாரிகள் நலசங்கம் சார்பில், அறக்கட்டளைக்கு நிதி வழங்குதல், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மற்றும் மருத்துவத்-துறை மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்-குதல் என முப்பெரும் விழா நடந்தது. ஆசிரியர் சொக்கலிங்கம் வரவேற்றார். தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
விழாவில், 25க்கும் மேற்பட்டோர் அறக்கட்டளைக்கு நிதி வழங்கி ஆயுள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியரும், அறக்கட்டளை நிறுவனரு-மான செல்வத்திற்கு, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.கடந்த கல்வியாண்டில், 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு, தலா, 2,000, 3,000 மற்றும் 4,000 என ரொக்க பரிசுகளும், சான்றிதழும், 49 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா, 1,000 ரூபாயும் வழங்கப்பட்-டன. முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு புதிய ஆடைகளும் வழங்கப்பட்டன.
இதில், மீன் வியாபாரிகள் நல சங்க தலைவர் முனிசாமி, துணைத்-தலைவர் ராஜா, செயலாளர் ஜெயகுமார், துணை செயலாளர் சீனி-வாசன் மற்றும் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.