/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
/
தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 13, 2025 02:40 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர, தி.மு.க., சார்பில், பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோவில் உள்ள கட்சி அலுவல-கத்தில், சமத்துவ பொங்கல் விழா நேற்று
கொண்டாடப்பட்டது.
மாநகர செயலாளர் மேயர் சத்யா முன்னிலை வகித்தார். கிருஷ்ண-கிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, ஹிந்து, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்கள் முன்னி-லையில், சமத்துவ பொங்கலை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பம், யோகா, பரதநாட்டியம், பறை இசை போன்ற பல்-வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்களுக்கு தனித் தனியாக சாக்கு ஓட்டம், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட பல்-வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற-வர்களுக்கு
எம்.எல்.ஏ., பிரகாஷ் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக, எம்.எல்.ஏ., பிரகாஷ் மற்றும் மேயர் சத்யா ஆகியோர், பொதுமக்கள் முன்னிலையில் சிலம்பம் சுற்றினர். முன்னாள்
எம்.எல்.ஏ., முருகன், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகர அவைத்தலைவர் செந்தில், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மாணிக்கவாசகம் உட்பட பலர்
பங்கேற்றனர்.