/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 09, 2025 08:00 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகள், ஓசூர் வெங்கடேஷ் நகர் சப்தகிரி பள்ளியில், தமிழியக்கம் சார்பில் நேற்று நடந்தது. மாவட்டத்திலுள்ள, 9 கல்லுாரிகளில் இருந்து, 54 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழியக்க அமைப்பு செயலாளர் வணங்காமுடி தலைமை வகித்தார். 'வள்ளுவர் இன்று வந்தால் மகிழ்வார் அல்லது வருந்துவார்' என்ற தலைப்பில் பேச்சு போட்டி, 'வள்ளுவரும் சமூகநீதியும்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி, 'வள்ளுவர் பாடும் பெண் குழந்தை தாலாட்டு' என்ற தலைப்பில் கவிதை போட்டி ஆகி-யவை நடந்தன. கவிஞர் கருமலை தமிழாழன், திருச்சி திலகவதி மற்றும் பேராசிரியர் லட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
கவிதை போட்டியில் மாணவி ரோகினி, கட்டுரை போட்டியில் பிரியதர்ஷினி, பேச்சு போட்டியில் பவித்ரா ஆகியோர் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். முத-லிடம் பெற்ற மாணவியருக்கு, 2,000 ரூபாய் மதிப்புள்ள நுால்கள், இரண்டாமிடத்திற்கு, 1,500 ரூபாய் மதிப்புள்ள நுால்கள், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு, 1,000 ரூபாய் மதிப்-புள்ள நுால்களை, இஸ்ரோ திட்ட இயக்குனர் தேன்மொழி வழங்-கினார்.தமிழியக்க மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம், நிர்வாகிகள் எழிலரசன், வடிவேல், ரவிக்குமார், சம்பத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.