/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போடிசிப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ராகி கொள்முதல்; விவசாயிகளுக்கு அழைப்பு

ADDED : பிப் 01, 2024 10:47 AM
கிருஷ்ணகிரி: போடிசிப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில், ராகி கொள்முதல் நடப்பதால், விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள, வேளாண் உதவி இயக்குனர் கலா அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள போடிசிப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், ஒரு கிலோ ராகி, 38.46 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, வேளாண் துணை இயக்குனர் சீனிவாசன், போடிசிப்பள்ளி கூட்டுறவு விற்பனை மையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது, இத்திட்டத்தில் பயன் பெற, விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, ஆதார் கார்டு, வங்கி புத்தக நகல், ராகி பயிர் செய்த நிலத்தின் அடங்கல் ஆகியவற்றை, வி.ஏ.ஓ., கையொப்பத்துடன் மற்றும் சுத்தம் செய்யப்பட்ட ராகி குவியலில் இருந்து, ஒரு கிலோ ராகியை, போடிசிப்பள்ளி
கூட்டுறவு மையத்திற்கு சென்று, தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். கொள்முதல் முடிந்த, 2 முதல், 3 நாட்களுக்குள் விவசாயியின் வங்கிக்கணக்கில் பணம் வந்து சேர்ந்து விடும்.
இவ்வாறு, கூட்டுறவு சொசைட்டி மூலம் விற்பனை செய்வதால் இடைத்தரகரின்றி விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம். இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.