ADDED : செப் 19, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில், கமிஷனர் ஸ்ரீகாந்த் தலைமையில், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கடைகள் மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு தொழில் உரிமம் பெற வேண்டியதன் அவசியம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று
நடந்தது. இதில், தொழில் உரிமம் பெற வேண்டியதன் அவசியம், அதற்கு தேவையான ஆவணங்கள், விண்ணப்பம் செய்ய
வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்குள் அனைத்து தொழில் நிறுவனங்களும் தொழில் உரிமம் பெற
விண்-ணப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவ-டிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

