/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் முன்னேற்பாடு மோசம்: முனுசாமி
/
சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் முன்னேற்பாடு மோசம்: முனுசாமி
சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் முன்னேற்பாடு மோசம்: முனுசாமி
சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் முன்னேற்பாடு மோசம்: முனுசாமி
ADDED : அக் 09, 2024 06:42 AM
கிருஷ்ணகிரி: ''சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் முன்னேற்பாடுகள் மிக மோசமானதாக இருந்ததால், உயிர்பலி ஏற்பட்டுள்ளது,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரியில் நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: விமானப்படையின், 92வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், இது போன்ற நிகழ்ச்சி நடந்தது. அப்போதும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. காரணம் ஜெயலலிதாவின் நிர்வாக திறன். தற்போது அதுபோன்ற நிர்வாகம் இல்லை. முன்னேற்பாடு பணிகள் மோசமாக இருந்ததால், உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளன.
மாநில துணை முதல்வர் பதவி உருவாக்க, சமநிலையில் தலைவர்கள் இருக்க வேண்டும். உதாரணமாக கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் சிவக்குமார், ஆந்திராவில் கூட்டணியில் பவன் கல்யாண் வெற்றிக்கு உதவியதால், துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.ஆனால், தி.மு.க., ஆட்சியில் சொந்த மகனை, துணை முதல்வர் ஆக்குகிறார்கள். தங்களின் குடும்பத்தை பாதுகாக்கவும், தி.மு.க., கட்சி தங்கள் குடும்ப கட்டுப்பாட்டில் இருக்கவும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மது ஒழிப்பு மாநாட்டுக்கு, வி.சி.க., தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க., தி.மு.க.,வை அழைத்தார். எந்தவித தார்மீக உரிமை இல்லை என்றாலும் அதில், தி.மு.க., கலந்து கொண்டது. இது கீழ்தரமான அரசியல். மது ஒழிப்பு கொள்கை, மத்திய அரசு கையில் இல்லை. மாநில அரசு ஒரு கையெழுத்து போட்டால் கடைகள் மூடப்படும். தி.மு.க., அரசு, மக்களையும், கூட்டணி கட்சிகளையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

