ADDED : மார் 14, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, : கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் பஞ்., லைன்கொல்லையில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 20.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 60,000 லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மோரமடுகு பஞ்., உஸ்தலஅள்ளியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அதேபோல, கிருஷ்ணகிரி ஒன்றியம் கங்கலேரி பஞ்., கூத்தப்பன் கொட்டாயில், 3 லட்சம் ரூபாயில், புதிய ஆழ்துளைக்கிணறு அமைத்து, மோட்டாருடன் கூடிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட் டுள்ளன.
பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று இவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் திறந்து வைத்தார்.

