/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.16.60 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள் துவக்கம்
/
ரூ.16.60 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 26, 2025 12:53 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 16.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.கிருஷ்ணகிரி ஒன்றியம், திப்பனப்பள்ளி பஞ்., தாசிரிப்பள்ளி கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, பெரியமுத்துார் பஞ்., நெக்குந்தி காலனி கிராமத்தில், அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், 3.60 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
அப்போது அப்பகுதி மக்கள், மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். பாசன கால்வாய் குறுக்கில் தரைப்பாலம் அமைக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறை உள்ளது என, எம்.எல்.ஏ.,விடம் புகார் தெரிவித்தனர். ஒன்றிய செயலர்கள் கண்ணியப்பன், சூர்யா, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலர் ஆஜி, இளைஞர் அணி ஒன்றிய செயலர் சின்னசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

