/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.21.50 லட்சத்தில் திட்டப்பணி துவக்கம்
/
ரூ.21.50 லட்சத்தில் திட்டப்பணி துவக்கம்
ADDED : ஜூலை 31, 2025 01:31 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி சென்னை சாலையிலுள்ள அரசு போக்குவரத்து நகர பணிமனையில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கிருஷ்ணகிரி நகராட்சி, 19வது வார்டு தம்மண்ண நகரில், 11.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகளை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், ஒன்றிய செயலாளர் சூர்யா, நகர செயலாளர் கேசவன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், அமைப்புசாரா ஓட்டுனரணி மாவட்ட செயலாளர் ஆஜி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ், கிளை மேலாளர் விமலன், அரசு போக்குவரத்துக்கழக மண்டலத் தலைவர் முருகன், கவுன்சிலர் அமுதா, டாக்டர் சுந்தரமூர்த்தி, வட்ட செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.