/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மிரட்டல் விடுத்தவருக்கு 'காப்பு'
/
மிரட்டல் விடுத்தவருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 08, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : ஓசூர் சானசந்திரத்தை சேர்ந்தவர் ரபிக், 34, கூலித்தொழிலாளி; இவர், பார்வதி நகரில் கடந்தாண்டு டிச.,ல் நடந்த இரட்டை கொலை வழக்கில் சாட்சியாக உள்ளார்.
இக்கொலையில், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி உஸ்மான், 23, என்பவ-ரது நண்பருக்கு தொடர்பு உள்ளது. அதனால் கடந்த, 5 காலை, 10:00 மணிக்கு, ரபிக்கிற்கு போன் செய்த உஸ்மான், கொலை வழக்கில் சாட்சி சொல்ல வேண்டாம் என கூறி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக, ரபிக் கொடுத்த புகார் படி, உஸ்மானை ஓசூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் மீது ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், கொலை மிரட்டல் வழக்கு உள்ளது.