/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ-.1,000 வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ADDED : ஜன 07, 2025 01:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தே.மு.தி.க., சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சின்னராஜ் தலைமை வகித்து பேசுகையில், ''பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில், 100 ரூபாய் மதிப்பில் அரிசி, சர்க்கரை வழங்குகின்றனர்.
அது கூட இல்லாமலா தமிழக மக்கள் உள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்சம் பொங்கல் பரிசாக, 1---,000 ரூபாய் வழங்க வேண்டும். போதை பொருட்கள்
நடமாட்டத்தை அழிக்க வேண்டும்,'' என்றார்.முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன், நகர செயலாளர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் முருகன், வஜ்ஜிரவேல், மாநில வர்த்தக அணி செயலாளர் முருகேசன், மாணவரணி துணை செயலாளர் திருப்பதி உள்பட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், கெலமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நேற்று மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.