/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தலைமையாசிரியரை கண்டித்து மறியல்
/
தலைமையாசிரியரை கண்டித்து மறியல்
ADDED : அக் 26, 2024 06:34 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு உத்தரவின்படி, நேற்று பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சசிகலா, 28, என்பவரை கூட்டத்துக்கு அழைக்காமல், தன்னிச்சையாக தலைமையாசிரியர் முகமதுசலீம் கூட்டத்தை நடத்தியுள்ளார். அங்கு வந்த சசிகலா, என்னை அழைக்காமல் ஏன் கூட்டம் நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு தலைமையாசிரியர், ஒருமையில் பேசியதாக கூறி திருப்பத்துார்-தர்மபுரி சாலையில், துவக்கப்பள்ளி எதிரில் சசிகலா, பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் சேர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். மத்துார் எஸ்.ஐ., கவுதம் அவர்களிடம் பேசி, விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.