/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம்
/
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம்
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம்
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம்
ADDED : செப் 23, 2025 02:10 AM
ராயக்கோட்டை, ராயக்கோட்டை அருகே, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த வன்னியபுரம் கிராமம் அருகே, ஐபோன்களுக்கு உதிரிபாகங்கள் தயார் செய்யும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இயங்குகிறது. இங்கு, தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம், 900 தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக, 15,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை உயர்த்த கேட்டும் வழங்கவில்லை. அதனால் நேற்று காலை, 8:00 மணிக்கு, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் முன், 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள், வேலைக்கு செல்லாமல் திரண்டனர்.
மாலை, 4:00 மணி வரை, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ் மற்றும் ராயக்கோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களுக்கு மாத ஊதியமாக, 23,000 ரூபாய் வழங்க வேண்டும். பஸ்சில் வேலைக்கு அழைத்து வர கோரிக்கை விடுக்கப்பட்டது. ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளரை அழைத்து, டி.எஸ்.பி., பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்க, 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என, ஒப்பந்த நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டது.
இன்று (செப்.23) ஒப்பந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற ஒரு தரப்பினர் வேலைக்கு சென்றனர். மற்றொரு தரப்பினர் 'ஷிப்ட்' முடிந்து விட்டதாக கூறி வீட்டிற்கு சென்றனர்.