/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ADDED : அக் 25, 2025 01:14 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், மத்திய மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஸ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பேபி நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் ரத்தினவேலு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், 70 வயது முடிந்த ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவப்படியாக மாதந்தோறும், 1,000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை, 50,000 ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.