/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
/
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
ADDED : மே 27, 2025 01:58 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. வட்ட செயலாளர் மாது தலைமை வகித்தார். மாநில செயலாளர் முத்து, வட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் செல்வராசு, மாநிலக்குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி ஒன்றியங்களில் பல ஆண்டுகளாக வீட்டுமனை இல்லாமல் கூட்டு குடும்பமாக வாடகை வீடுகளில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தலைமுறை, தலைமுறையாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருந்து வரும் விவசாய தொழிலாளர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, கோரிக்கை மனுவை தாசில்தார் அலுவலகத்தில்
வழங்கினர்.