/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
ADDED : டிச 12, 2025 05:25 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த வரட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், வரட்டனப்பள்ளி, சிந்-தம்பள்ளி, மேல்கொட்டாயை சேர்ந்த, 219 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் காந்திமதி, லியோன், பூங்காவனம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பர்கூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., மதியழகன், மாண-வர்களுக்கு சைக்கிள் வழங்கி பேசியதாவது:துவக்கப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் முதல், உயர்கல்வி, கல்-லுாரி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தையும் தமிழக அரசு வழங்குகிறது. தற்போது பிளஸ் 1 பயிலும் மாண-வர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. கல்வி தான் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு அடித்-தளம் என உணர்ந்து அரசு செயல்பட்டு வருகிறது. இதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது பெருகி வரும் தொழில்நுட்பங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியுடன், தொழில்நுட்ப அறிவையும் பெருக்கி கொண்டு எதிர்காலத்தில் இன்றைய மாணவர்கள் சிறந்த அதிகாரிகளாக வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், பி.டி.ஏ., தலைவர்கள் மணிவண்ணன், சுந்தர்ராஜன், வெங்-கடேசன், ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவ-லர்கள் கலந்து கொண்டனர்.

