/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
/
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
ADDED : டிச 12, 2025 05:26 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்ட-சபை தொகுதி, அங்கொண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்-பட்ட சக்கார்லு பகுதியில், தார்ச்சாலை அமைக்க, அப்பகுதி மக்கள், 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கனிமங்களும், குவாரிகளும் திட்டத்தில் இப்பகுதியில், தார்ச்சாலை அமைக்க, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று அப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.,வுமான பிரகாஷ் பணிகளை துவக்கி வைத்தார். சூளகிரி, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

