/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : டிச 11, 2025 06:30 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியின், உயிர் தொழில்நுட்ப-வியல் துறை மற்றும் சென்னை 'வீவில் பயோடெக் நிறுவனம்' இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர்., கல்லுாரி முதல்வர் முத்துமணி தலைமை வகித்து, புரிந்து-ணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படை தேவைகள் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் சார்ந்த கல்வி பணிகள் குறித்து விளக்கி கூறினார்.
சென்னை 'வீவில் பயோடெக் நிறுவன' இயக்-குனர் வீரமணி வேலாயுதம். உயிர் தொழில்நுட்ப-வியலின் எதிர்காலம், அதற்கான மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.
மேலும், மாணவர்களுக்கு இன்டன் ஷிப், புராஜக்ட் மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவும், உயிர் தொழில்நுட்பவியல் சார்ந்த பிற நிறுவனங்களில் பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார். உயிர் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் முருகன், அதியமான் கல்லுாரி செயலாளர் சுரேஷ் பாபு, மேலாளர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

