/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் ராஜாஜி பிறந்த நாள் விழா
/
ஓசூரில் ராஜாஜி பிறந்த நாள் விழா
ADDED : டிச 11, 2025 06:30 AM
ஓசூர்: ஓசூர் அருகே, தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி நினைவு இல்லத்தில், அவரது, 147வது பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவ படத்தை, மாவட்ட கலெக்டர் தினேஷ்-குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் திறந்து வைத்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
மேலும், ராஜாஜி இல்லத்தில் உள்ள அவரது மார்-பளவு சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், ராஜாஜி இல்லத்திலுள்ள அவரது வாழ்க்கை வர-லாறு குறித்த புகைப்படங்களை பார்வையிட்-டனர்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பேசுகையில், ''ராஜாஜி நினைவு இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க, 44.50 லட்சம் ரூபாய் ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின், கடந்த செப்., 14ம் தேதி பணியை துவக்கி வைத்தார்.
தற்போது, நினைவு இல்லத்தில் மூங்கில், ஓடுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், கழிவறை வசதிகள், கூடுதலாக மின் வசதி, வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்-ளன. இப்பணிகள் வரும் ஜன., மாதத்தில் நிறைவு பெறும்,'' என்றார்.
ஓசூர், சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, பொது சுகா-தார குழு தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க., ஒன்-றிய செயலாளர் ராமமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் உட்பட பலர் பங்-கேற்றனர்.

