/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளியில் 'ரீல்ஸ்' எடுத்த சிறுவர்களுக்கு எச்ச-ரிக்கை
/
பள்ளியில் 'ரீல்ஸ்' எடுத்த சிறுவர்களுக்கு எச்ச-ரிக்கை
பள்ளியில் 'ரீல்ஸ்' எடுத்த சிறுவர்களுக்கு எச்ச-ரிக்கை
பள்ளியில் 'ரீல்ஸ்' எடுத்த சிறுவர்களுக்கு எச்ச-ரிக்கை
ADDED : டிச 11, 2025 06:29 AM
பாகலுார்: ஓசூர் அருகே, பாகலுாரில் அரசு பெண்கள் மேல்-நிலைப்பள்ளி இயங்குகிறது. பள்ளி தலைமையா-சிரியராக தர்மசம்வர்த்தினி உள்ளார். இப்பள்ளி வளாகத்தில், அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவன், தனியார் கல்லுா-ரியில் பி.பி.ஏ., முதலாமாண்டு படிக்கும், 17 வயது மாணவன் மற்றும் 17 வயதான வேலை செய்யும் இரு சிறுவர்கள் என, 4 பேர், 'ரீல்ஸ்' எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்-ளனர்.
இது வைரலான நிலையில், உரிய அனுமதி-யின்றி பள்ளிக்குள் சிறுவர்கள் வந்தது தெரிந்தது. அதனால், பள்ளி தலைமையாசிரியை தர்மசம்-வர்த்தினி, பாகலுார் போலீசில் நேற்று புகார் செய்தார். மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, போலீசார் சி.எஸ்.ஆர்., மட்டும் பதிவு செய்து, சிறுவர்களிடம் இதுபோன்று இனி, 'ரீல்ஸ்' எடுக்-கக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.