/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பர்கூர் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்
/
பர்கூர் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்
ADDED : நவ 02, 2024 04:18 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பர்கூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி, மல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, தொகரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பண்ணந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பர்கூர் எம்.எல்.ஏ.,மதியழகன் தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கி பேசியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, கல்விக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவியர் பள்ளி வந்து செல்வதற்காக, அரசின் சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவியருக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்கள் மூலமாக மாதம், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர் பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார், நாகோஜனஹள்ளி டவுன் பஞ்., தலைவர் தம்பி துரை, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.